Account

Posts of ஆரோக்யமும் ஆன்மீகமும்

newest first

#5107Text

நான் இறைவன் மீது அளவு கடந்த பக்தி உடையவனாக இருக்கிறேன். எனினும் துன்பங்கள் தீர்வதில்லையே ? இராம் மனோகர் - பக்தி செலுத்துவதினால் துன்பங்கள் தீர்ந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நாம் செலுத்தும் பக்தியின் தரம் என்ன ? என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பக்தி என்பதே நம் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைப்பதற்கான ஒரு யுக்தியே. பக்தி என்ற சொல்லிற்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா ? அன்புதான். அன்பின் உயர்ந்த நிலைதான் பக்தி எனப்படுகிறது. நாம் தாய், பிள்ளைகள், மனைவி, சகோதர சகோதரிகள், உறவினர்கள், சில சுற்றத்தார்கள் என்று எல்லோரிடமும் அன்பாகத்தான் இருக்கிறோம். ஆனால், அது பக்தி என்று சொல்லப்படுவதில்லையே ? காரணம் இத்தகைய அன்பிற்குப் பின்னால் சுயநலம் இருக்கிறது. ஆனால், சுயநலமின்றி இறைவன் மீது செலுத்தப்படும் அன்பை மட்டுமே பக்தி என்கிறோம். பக்தி செலுத்தினால் கடவுளிடம் இன்ன விதமான நன்மைகளைப் பெற்று விடலாம் என்ற எண்ணமோ, சுயநலமோ துளியாவது இருக்குமாயின் அது பக்தியாகாது. அப்படியானால் உண்மையான பக்தன் கூட கடவுளிடம் மன மகிழ்ச்சியையும், இன்பத்தையும் வேண்டுகிறான்தானே என்ற கேள்வி எழக் கூடும் ? ஆனால், நீங்கள் மெய்யடியார்கள் சரிதங்களைப் படித்துப் பாருங்கள். தனக்கோ, தன் குடும்பத்திற்கோ மட்டும் இன்பம் வேண்டும் என்று எந்த இறையடியார்களும் இறைவனை வேண்டி நின்றதில்லை. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றுதான் அவர்கள் வேண்டி நின்றார்கள். அதில் சுயநலம் என்பது துளி கூட இருந்ததில்லை. இறைவன் மீது செலுத்துகிற அன்பை அவர்கள் இறைவனின் அனைத்து படைப்பின் மீதும் செலுத்தினார்கள். வள்ளல் பெருமான் வாடி நின்ற பயிரைக் கண்டு கூட வாடினார் என்ற சேதி நாம் அறிந்ததுதானே ? இதுதான் உண்மையான பக்திக்கு அடையாளம். இறைவனை நம்புவதோ, அவர் ஆலயங்களுக்குச் சென்று பணிகள் செய்வதோ, பஜனைகள் பாடுவதோ, பூஜைகள் செய்வதோ மட்டும் பக்தியாகி விடாது. அன்பு செலுத்த வேண்டும். அனைத்தின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனம் அன்பு மயமாக ஆகி விட வேண்டும். அதுதான் பக்தி. கீதையில் பக்தி யோகம் சொல்வது என்ன ? ஆடம்பரமின்றி, மன ஈடுபாட்டுடன் எளிய முறையில் யார் பக்தி செலுத்தினாலும், அதை இறைவனாகிய நான் ஏற்றுக் கொள்வேன் என்கிறார். உண்மையான அன்போடும், சிரத்தையோடும், சகல கர்மங்களையும் என் பொருட்டு செய்து, பலனையும் எனக்கே அர்ப்பணம் செய்கிறவர்களின் பக்தியை நான் ஏற்றுக் கொள்வேன். உண்மையான பக்தியோடு எவர் ஒருவர் எனக்கு இலை, பூ, பழம், நீர் இவற்றை சமர்பித்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். நீ எதைச் செய்தாலும், தின்றாலும், எதை அர்க்கியமாகக் கொடுத்தாலும், விரதத்தை கடை பிடித்தாலும் அவற்றை எல்லாம் எனக்கே சமர்ப்பணம் செய்து விடு. அதுவே பக்தி என்கிறார். இப்படி நன்மை, தீமை என்ற பலன்களைக் கொண்ட கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு உண்மையான அன்போடு திகழ்பவன் என்னிடம் வந்து சேருவான் என்கிறார். நான் அனைவருக்கும் ஒன்றே. விரோதியும், பந்துவும் எனக்கில்லை. யார் என்னிடம் உண்மையான அன்பை செலுத்துகின்றார்களோ, அவர் என்னிடத்தில் இருக்கிறார்கள், நான் அவர்களிடத்தில் இருக்கிறேன் என்கிறார். அதாவது ஒரு சாமான்யன் தன் அருளைப் பெற அல்லது தம்மை வந்து அடைய கடுமையான சாதனைகள் எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மனம், மொழி, மெய் ஒருமுகப்பட்ட நிலையில் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் என்கிறார். எனவே நீங்கள் உங்கள் பக்தியின் தரத்தை இன்னும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. அதாவது இன்னும் உங்கள் உள்ளத்தில் அன்பினால் நிரப்பப்பட வேண்டிய பகுதி பாக்கி இருந்தால், அதை முழுவதுமாக நிரப்புங்கள். அன்புமயமாக மாறுங்கள். அதற்குப் பிறகு இன்பமுமில்லை, துன்பமுமில்லை. ஆனந்தம் மட்டுமே. அர்த்தமுள்ள இந்து தர்மம்.. ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

Open in Telegram
Views240−48%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5105Text

அப்படி தேடுதல் உள்ளவர்களுக்கே அவர்களை அறியாமல் எழுந்துவிடுகின்றது என்றால், இவர்களுக்கு மட்டும் எப்படி?? அது தெரியும். ஆன்மீகத்தில் குரு என்பவர் ஒரு விளக்கை ஏற்ற உதவும் தீக்குச்சியை போன்றவர். விளக்கை ஏற்றும் வரைக்கும் தான் அவருக்கு வேலை. ஆனால் அப்படிபட்டவர் உங்களை தேடி அவரே தான் வருவாரே தவிர, நம்மால் அவர்களுக்கு ஆவதற்கு ஒன்றுமில்லை. ஒரு சிலருக்கு எழவைத்து பின் இறக்கி புருவபூட்டை திறந்தும், இயற்கையாகவே எழுந்த ஒ ரு சிலருக்கு இறக்கி புருவபூட்டை திறந்து வைப்பதும் இவர்களே!! அப்படி செய்வதும் கூட அவர்களுக்கு தெரிந்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அதுவும் தெரியாமலே நடந்துவிடும். தன்னை வெளிக்காட்டி கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தால் தானே, வெளி காட்ட வேண்டும். https://youtu.be/sm8V--8E_z0 மொத்தத்தில் குரு என்பவர் அவசியம். ஆனால் அவர் வெளி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அனைத்தும் ஒரு சில நொடிகளிலேயே நடந்து முடிந்துவிடலாம். ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும். "சிரம் முட்டும் பொழுதில் வரம் தட்டும் குருவே தரம் பார்த் துன்னை பரம் ஆக்கிடு வான்" ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல் திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக சக்கரம் விழிப்படைதலே காரணம். பக்தி நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும், முக்தி நிலைக்கு சகஸ்ராரம் விழிப்படைதலும், யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும், ஞானத்தேடலுக்கு மூலாதாரம் விழிப்படைதலும் காரணமாகும். நாதத்தின் மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு விசுத்தி விழிப்படைதலே காரணமாகும். மேலும் நாம் தியானத்தில் அமரும் போது குண்டலினியானது புருவமத்தி அல்லது சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும். https://youtu.be/sm8V--8E_z0 அந்த அமிர்தமும் விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்). குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய் விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக அடையாளமாக காண்பது விந்தின் வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும். மேலும் உடலில் நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U" நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில் உடல் விடும் வரை இருக்கும். கை விரலால் தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத் தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம். சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின் வழியாக அமிர்தமானது பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன் வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும் பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம். https://youtu.be/sm8V--8E_z0 அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும் வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம். உடல் அடையாளமாக சாதாரணமாகவே உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும் புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும், மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில் ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு உருண்டையாக இருந்துகொண்டு எதையும் நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு உறுத்தல் ஏற்படும். மற்றபடி காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இருக்கும் இடத்திற்கு சற்று மேலே ஊர்க்குருவிகள் தட்டுப்படும். மாலை 6 மணி தாண்டி காலை 6 மணி வரை அமிர்தத்தின் மீயொலி நாதத்தின் ஈர்ப்பால் இருக்கும் இடம் மற்றும் செல்லும் இடம் எல்லாம் வௌவால்கள் கண்ணில் தட்டுப்படும். இப்பதிவு : "அமானுஷ்ய இரகசியங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து. "நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்" "ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்" https://youtu.be/sm8V--8E_z0

Open in Telegram
Views326−29%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5104Text

"குண்டலினி" மெஞ்ஞானத்தை பற்றி விஞ்ஞானத்தால் விளங்கி கொள்ளவோ விளக்கவோ முடியாத இன்றைய சூழ்நிலையிலும், விஞ்ஞானதிற்கு விளங்காத விஷயங்களையும் மெஞ்ஞானம் விஞ்ஞானமுறையில் விளக்கி கொண்டுதான் உள்ளது. அதற்கு ஓர் உதாரணமே இப்பதிவு. "அமானுஷ்ய இரகசியங்கள்" என்ற புத்தகம் குண்டலினி சக்தியை பற்றி விஞ்ஞானமுறையில் தெளிவாக விளக்கியுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு பகுதியை கொண்டே இப்பதிவின் ஓர் பகுதி விளக்கப்பட உள்ளது. பதிவுக்குள் நேரடியாக செல்வதற்கு மன்னிக்கவும். குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. https://youtu.be/sm8V--8E_z0 இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில் மூலத்தில்தான் கண்டறிய முடியும் என்பதை கண்டோம். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது. இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை மேலும் அதிகரித்து அனாகதத்தை அடைகின்றது. அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். https://youtu.be/sm8V--8E_z0 சுத்த ஆக்சிஜன் எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும். எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து விசுத்தியை அடைகின்றது. ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது. அடுத்ததாக உள்ள சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு அந்த புத்தகத்தில் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் எழும்பிய குண்டலினி சகஸ்ரத்திற்கு சென்றபின்புதான் புருவமத்தி பூட்டு திறந்து கீழிறங்கி ஆக்கினையை அடையும். அப்படி பூட்டு திறந்து அங்கே பார்த்தால் சுத்த கந்தகம் இருக்கும். இது எப்படி உண்மை?? என்ற கேள்வி வரலாம்!! அதனால் தான் முந்தைய பதிவில் சக்கரங்கள் என்று குறிப்பிட்ட இடங்களில் எண்ணென்ன சுரப்பிகள் உள்ளன என்பதை விவரிக்கப்பட்டது. அந்த சுரப்பிகளையும் அதன் இயக்கத்தில் சுரக்கப்படும் வேதிபொருட்களையும் ஆராய்ந்தால் மேற்கண்ட தனிமங்களே இருக்கும். முடிந்தால் அந்த புத்தகத்தை வாங்கி ஒருமுறையாவது படிக்கவும். ஆன்மீக சம்பந்தமான உங்கள் பார்வை சிலமணி நேரம் விஞ்ஞானத்திற்குள்ளும் சென்று வரும் என்பது உறுதி. சித்தர்களை ஏன்?? விஞ்ஞானிகள் என்று அழைத்தனர் என்பதும் புரியும்!! https://youtu.be/sm8V--8E_z0 இந்த மூலஅனல் எழுவதற்கு எந்த யோகம் சிறந்தது?? இதற்கு குரு அவசியமா?? இதில் ஆபத்து எதாவது உள்ளதா?? என்ற கேள்விகள் வரலாம்!! உண்மையில் இந்த மூலஅனல் எழுவதற்கு எந்த ஒரு யோகமும் தேவையே இல்லை!! என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு!! உண்மையான தேடுதல் உள்ளவனுக்கோ அல்லது பக்குவிக்கோ அவர்களை அறியாமலே குண்டலினி விழிப்படைந்து எழுந்துவிடுகின்றது. எப்படி?? என்றால் இதற்கு முந்தைய பதிவுகளில் இவைகளை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது!! குண்டலினி எழுப்புவது மிகவும் ஆபத்தான ஒன்று என்று பலர் கூறுவது உண்டு. அவர்கள் காட்டும் உதாரணம் கூட தவறான முறைகள் அல்லது சித்து அல்லது சக்திகள் பெற அலைந்த சுயநலக்காரர்களின் முடிவை தானே தவிர, உண்மையான தேடுதல் அல்லது பக்குவியை அவர்கள் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. இயற்கையும் இறைவனும் எந்த ஒரு காலத்திலும் யாருக்கும் தீங்கு நினைப்பதே இல்லை.

Open in Telegram
Views256−45%vs avg
Forwards—
Reactions2
Comments—
#5103Text

பிராணன் என்றால் என்ன ? அது எங்கிருந்து வருகின்றது. அதை ஏன் தியான வாழ்வில் பிராதனப்படுத்துகிறார்கள் ? இராம் மனோகர் - மனதிற்கும் உடலுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதே பிராணன்தான். பிராணனின் துணை கொண்டுதான் மனம் உடலைக் கட்டுப்படுத்த முடியும். இன்றைய காலகட்டங்களில் மனிதனுக்கு வரும் பல உடல் மற்றும் மன நோய்களுக்குக் காரணம் பிராணனின் ஒழுங்கற்ற இயக்கமே. பிராணனின் இயக்கத்தை சீராக்கிக் கொள்வதன் மூலம் உடல், மன ஆற்றல்களை ஒருங்கிணைக்க முடியும். நம் மனதின் பல விதமான நிலைப்பாடுகளுக்குப் பின்னாலும் பிராணனின் ஆற்றல்தான் செயல்படுகிறது. எனவேதான் பிராணனை சூத்திரம் என்பார்கள். அதாவது அனைத்தையும் கோர்க்கும் பூ நூல். இவை எல்லாவற்றிற்கும் பின்னால்தான் ஆன்மா அஸ்திவாரமாக, ஆதாரமாக இருக்கிறது. ஆன்மா அசையாமல் இருக்க, பிராணன் அதற்கு மேல் நின்று இயங்குகிறது. ஆன்மாவிலிருந்துதான் பிராணன் வருகின்றது. இந்தப் பிராணன் பிரபஞ்ச நிலை, தனி மனித நிலை என்று இரண்டு நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நமது உடலைப் பொருத்த வரை இடகலை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் வழியாக இந்தப் பிராணன் இயங்குகிறது. சுழுமுனை பெரியது. மற்ற இரண்டும் சிறியவை. நாம் சிந்திக்கும் பொழுது சிறிதளவு பிராணன்தான் உபயோகப்படுகிறது. மீதி பிராணன் சேமிக்கப்படுகிறது. இதையே குண்டலினி என்கிறார்கள். பெரும்பாலான மனிதர்களுக்கு சுழுமுனை செயலுக்கு வருவதேயில்லை. இதனால் குண்டலினி ஆற்றல் வீணாகிப் போகிறது. வற்றாத இருப்பான மஹத் எனப்படும் பிரபஞ்ச மனதில் இருந்தான் பிராணன் தோன்றுகிறது. புற விஷயங்களின் தேவைக்கான ஆற்றலை நாம் அதனிடத்திலிருந்துதான் பொற்றுக் கொள்கிறோம். அது போல நம் ஆன்மாவிடமிருந்து மனதின் மூலமாகவும் நாம் பிராணனைப் பெற்றுக் கொள்கிறோம். அதனால்தான் பிராணனின் இயக்கத்தைப் பொருத்து மனிதனின் மனநிலை அமைகிறது. நம் முன்னோர்கள் அனைத்து இயக்கங்களுக்குப் பின்னாலும் இந்த பிராணன் நின்று இயங்குவதை உணர்ந்தார்கள். அதை அக்கினியாகக் கண்டார்கள். உணவு உட் கொள்வதற்கு முன் அதை பிராணனுக்கு பிராணாஹூதி செய்வார்கள். தினமும் மூன்று முறையாவது பிராணாயமம் செய்வார்கள். அதை நெறிப்படுத்துகிற அளவு ஒருவரின் மனநிலை அமைகிறது என்பது அவர்கள் கண்டறிந்த இரகசியமாகும். ஜீவ பிரம்ம ஐக்கிய இரகிசியம் என்பது வேறொன்றுமில்லை, பிராணனின் செயல்பாடுதான். இடகலை, பிங்கலை நாடிகளின் இயக்கத்தைப் பொருத்துதான் மன வாழ்வு அமைகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று இயைந்து செயல்படும் பொழுது மனம் விழிப்புடன் இருக்கும். அவை அளவுக்கு மீறி செயல்பட்டால் மனம் கண்டபடி அலையும். மெதுவாக இயங்கினால் மனம் மந்த நிலைக்கு ஆட்படும். நாம் சிந்தனை செய்யும் பொழுது சிறிதளவு பிராணன் இந்த இரு நாடிகள் வழியாகத் தனித் தனியாகப் பாய்ந்து சம்ஸ்காரங்களைத் தூண்டும். இந்த இரண்டு நாடிகளும் இயைந்து செயல்படும் பொழுது மனம் அமைதியாக விழிப்புடன் இருக்கும். இந்த நிலைதான் தியானத்திற்கு ஏற்றது. எனவே பிராணனை நெறிப்படுத்திக் ஒரு கட்டுக்குள் ஒழுங்காகச், சீராக இயங்கச் செய்வது தியான வாழ்வின் தேவையாகும். பிராணனின் துணை கொண்டுதான் மனம் உடலைக் கட்டுப்படுத்த முடியும். மனதிற்கும் உடலுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதே பிராணன்தான். "ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

Open in Telegram
Views479+4%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5102Text

*நம் வீட்டில் அன்பு, மகிழ்ச்சி, செல்வம், நல்ல படிப்பு, மன நிம்மதி, ஆரோக்கியம் கிடைக்க பெற..!* *யோகம் தரும் வாஸ்து நேர பூஜை..!* *சொந்தமாக இடம் வாங்க, வீடு கட்ட, தொழில் அமைய வேண்டியும்.. இப்போது குடி இருக்கும் வீட்டில் அன்பு, மகிழ்ச்சி, நல்ல படிப்பு, மன நிம்மதி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் குறைவில்லா செல்வம் கிடைக்கப்பெற வேண்டியும்..* *நாளை வாஸ்து நாள் செவ்வாய்க்கிழமை 24-11-26, வாஸ்து நேரம் காலை 11.29 AM To 12.05 PM வரை.* *நாளை கார்த்திகை தீபம், பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை இணைந்து சிறப்பான நாளாக உள்ளது..!* *வாஸ்து நேரத்தில் தாங்கள் இப்போது குடியிருக்கும் வீட்டின் தலைவாசல் மற்றும் வாசல் படியை சுத்தம் செய்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, பூக்கள், நவதானியம், பிரசாதம், மஞ்சள் கலந்த தீர்த்தம் வேப்பிலையுடன் வைத்து பூஜை செய்து அந்த மஞ்சள் கலந்த நீரை வீட்டின் எல்லா பகுதியிலும் மற்றும் வீட்டை சுற்றி எல்லா பகுதியிலும் தெளித்து வழிபட உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!* *சொந்த வீடு கட்ட விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு..!* *ஓம் ஶ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..!*

Open in Telegram
Views412−11%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5101Text

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான். தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது. ' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான். ' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான். ' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது. 'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும். ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான். ' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா' அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான். ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர். வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி. வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது. *............பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்த ஆன்மீகத் தொடர்* எப்படி முடிகிறது இவ்வளவு ஆழ்ந்து பாா்க்க!!........ புதியதாய் படிப்பவர்க்கு ஏதும் புரிய"வில்லை என்று நகர்ந்து விடுவாா்கள் சிலர் கற்பனையாக இருக்கலாம் எனலாம்.. உண்மையில் இதை பகவான் ரமணர் மகரிஷி கூட விவரித்தில்லை... பின்பு அனுபவித்தவர்களுக்கு தெரியும். ஆச்சரியம் என்ன வென்றால் தன்னை பாா்த்து கொன்டே தன்னுடைய அனுபவத்தை எழுதுவதேன்பது எழத்து சித்தரால் மட்டும் தான் முடியும்..... நன்றி.... ஓம் நமச்சிவாய... "நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்" "ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

Open in Telegram
Views387−16%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5100Text

உள்ளே பேரொளியாய் இருக்கிற அதுவே நான்...! *இறந்து போதல் என்றால் என்ன ?* (பல தடவை நான் விரும்பி படித்த காலத்தால் அழியாத பகிர்வு....) அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான். இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.' இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான். ' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான். வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது. ' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது. அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது. மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது. ' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

Open in Telegram
Views336−27%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5099Text

குலதெய்வமும், இஷ்ட தெய்வமும்.! தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வம் குல தெய்வம் எனப்படும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட முறையில் விரும்பி வழிபடும் தெய்வம் இஷ்ட தெய்வம் எனப்படும். குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். இன்றைக்குப் பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால் முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது. ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது. *குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?* ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் தீர்க்கும். ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும், குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம். பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குகிறார்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் மற்றும் திருமணம் முடிந்தவுடன் கணவரின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. ஆனால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை வழிபாடு செய்து வந்தால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்ககூடிய ஆற்றல் கிடைக்கும். *இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் :* நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைப்பதில்லை. குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படும். குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும் ஆன்மீக வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்.....!

Open in Telegram
Views118−74%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5098Text

தேவையானது, தேவையற்றது என்று எதுவும் இல்லை..! காலம் அறிந்து தேடுதல் தேவையானது.. காலம் தவறிய தேடுதல் தேவையற்றது. வாழ்வின் தேவைகள் அதிகரித்தால் தேவை இல்லாதது எல்லாம் தேவைபடும். நான்கை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாததால் நாற்பதை தேர்ந்தெடு அதில் நான்கு இக்கேள்விக்கு விடையாக இருக்கும். பித்தனாக சித்தனை தேடி அலைகின்கின்றான். தன் சித்தத்துள்ளே இருப்பது அறியாமல் கோடி கோடி தேடி சென்ற இடங்களிலும் தேடாத செல்வம் "நீ" சிவனே அய்யா.... என் எண்ணங்களுக்கு என்றுமே முடிவு இல்லை; ஒருவரின் பாடலுக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். ஆனால் இயற்றியவருக்கே பொருள் தெரியும். இவ்வுலகமே புகழ்சியின் அடிமைகள். ஆகையால் திருடுங்கள் தவறு இல்லை. (இல்லாதவனே திருடுகின்றான்) ஆனால் பொருள் தெரியாமல் விளக்கம் அளிக்காதீர்கள். அது உன்னையும் "அழித்து" உன்னை சார்ந்தவர்களையும் "அழிக்கும்" பிறந்தோம், இறந்தோம் என்றில்லாமல். வாழ்க்கையை முழுமையாக்குங்கள் ஆயிரம்பேருக்கு ஆசிரியராக இருப்பது முக்கியம் அல்ல, ஒருவருக்கேனும் குருவாக இருப்பதே முக்கியம்...... எப்பொழுதும் யாரிடமும் வாதம் செய்யாதே. சிலர் உன்னை அறிவாளியாக நினைப்பார்கள். பலர் உன்னை முட்டாள் என்பார்கள். உன் அறிவுரைகள் கேட்க இங்கு எவரும் இல்லை. அனைவரும் அறிவுரை சொல்லவே ஆசைப்படுகின்றார்கள். ஆதலால் நீ ஊமையாக இரு ஏதோ நான்கு விஷயம் அறிந்து மனதை குழப்பும் புத்திசாலியை விட முட்டாள் மேல். கடவுள் நம்பிக்கை தானே உருவானது அல்ல சித்தஞானியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கண்ணுக்கு தெரியாத மாயை. "அறிந்தவர்கள் எவரும் இல்லை" "உணர்ந்தவர்களே அதிகம்" அறியாத வயதில் செய்யும் தவறுகளை அறிந்த வயதில் புரிவதும், அறிந்த வயதில் செய்யும் தவறுகளை தெளிந்த வயதில் உணர்வதும் மனிதனின் இயல்பு. எஞ்சுவது காலங்களினால் கிடைக்கும் "அனுபவம்" மட்டுமே. எதர்க்கும் கலங்காதே தெளிந்த நீருடன் கலங்கிய நீர் சேரும் பொழுது கலங்கியது போல் தெரியும் உற்று கவனித்தால் கலங்கிய நீரை தெளிந்த நீர் தன்னுள் இணைத்து தெளிய செய்யும் தன்னை விட மேலான தெளிந்தவர்களோடு கலந்து இருங்கள் "உன் மனத்தால் பிழைக்கின்றான் குழப்பவாதி" உன்னை குழப்பம் அடைய செய்வதே இவன் வேலை. அதற்காக அவன் பயன்படுத்தும் ஆயுதம் விழிப்புணர்வுடன் இருங்கள் என்பது. எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட முடியும்? நடக்கபோவது யாருக்கு தெரியும். அனைத்து கலையும் கற்ற தருமரும் ஏன் சகுனி அழைப்பிற்கு சூதாட்டத்திற்க்கு சென்றார். விழிப்புணர்வு இல்லாமலா? வருங்காலம் அறியாமலேயே. வஞ்சகம்தனை உணர்ந்தார் பரதபோரின் முடிவினிலே. ஆகையால் உங்களது செயல்களை திறன்பட செய்யுங்கள் நிம்மதி கிடைக்கும். யாரிடம் வேண்டுமானாலும் உபதேசமும் கேளுங்கள் ஆனால் அடிமை ஆகாதீர்கள். "குரு திருவடிகளே போற்றி" *"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"* "ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

Open in Telegram
Views198−57%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5097Text

கர்ம வினை....! தங்களுக்கு நேரும் துன்பங்களுக்கு முன்ஜென்ம கர்மங்களே, அதன் பலன்களே காரணம் என்று நம்முள் பலர் புலம்புகிறார்கள். இதுவரை பலகோடி ஜென்மாந்திரங்களில் செய்த பாவமெல்லாம் ஒரே ஒருதரம் பகவான் "நாமாவை" சொல்லி விட்டாலே போய் விடும். நாம் எத்தனையோ தரம் சொல்லிவிட்டோம்....... இன்னும் நமது முன்ஜென்ம பலன் போகவில்லையா? இல்லை, நாம் மனதார பகவான் நாமத்தை சொல்லவில்லையா? உங்களை இறைவன் படைத்தான்; உங்கள் காரியங்களை இறைவன் செய்து தருகிறான் என்கிறீர்கள்; அப்படியானால் உங்களுக்கு ஏது கர்ம பலன்? நீங்கள் இறைவனைத்தான் முதல் உறவாக கொள்கிறீர்கள்; அவனுக்கு கர்மபலன் உண்டா? அவன்தானே உங்களுக்கு சொந்தம்; அந்த ஈசன் தான் உங்களுக்கு உறவென்றால் அவனது பிள்ளை நீங்கள். அப்படியிருக்கையில் உங்களுக்கு எப்படி பூர்வ ஜென்ம பாவம் இருக்கும். 30 வயதாகும் உங்களது, இப்போதைய கர்மத்தை உங்கள் 20 வயது செயல்கள் அல்லது அதன் பலன்கள் எந்த விதத்தில் பாதிக்கிறது? அல்லது தடுக்கிறது? உங்கள் 5 வயது செயல்கள் உங்கள் இப்போதைய கர்மத்தை எப்படி பாதிக்கிறது? இந்த ஜென்மத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செய்த செயல்கள் கூட உங்களுடைய இப்போதைய கர்மத்தை தடுக்கவில்லை எனும்போது அல்லது ஒரு சிறு தூசியளவு தடையையே ஏற்படுத்தும் போது, உங்கள் கடந்த ஜென்மங்கள் அல்லது உங்கள் மூதாதையரின் கர்மங்கள் உங்களை எப்படி பந்தப்படுத்தும்? உங்கள் திருமணம் கழிந்து இப்போது 3 வருடம் ஆகிறது, நீங்கள் திருமணமான புதிதில் சந்தோசமாக இருந்தீர்கள், ஆனால் இப்போது அந்த அளவிற்கு சந்தோசமாக இல்லை. இப்போது சந்தோசமாக இல்லாததற்கு என்ன காரணம்? திருமணமான நாட்களில் சந்தோசமாக இருந்த தருணங்களின் பலன் என்றால் நீங்கள் இப்போதும் சந்தோசமாக அல்லவா இருக்க வேண்டும்? ஒரு விதை உள்ளது, அது முழைப்பதற்கு நிர்ணயம் செய்வது எது? விதையின் வீரியம் முதல்படிதான். ஆனால் முழைத்தப்பின்னர் அதை மரமாக உயர எது பயன்படுகிறது? பிறவிக்கு நமது கர்ம பலன். ஆனால் அதன்பின்னர் வளர்ச்சிக்கு நாம் இங்கு வாழும் வாழ்க்கை முறையே உதவியாக உள்ளது. விதை முழைப்பதில் அதன் பூர்வ ஜென்மம் என்ன? முழைத்த பின்னர் அதன் போக்கை தீர்மானிப்பது என்ன? அடுத்த பிறவியை உங்கள் இந்த பிறவி செயல்கள் மாற்றுமென்றால் இந்த பிறவியை அவை மாற்றாதா? இல்லை இந்த பிறவி செயல்கள் முந்தைய பிறவியின் கர்மப் பலனை விழுங்காதா? நிரந்தர பாவம் நிரந்தர புண்ணியம் என்று ஏதாவது உண்டா? அப்படி இல்லாதபோது உங்கள் முந்தைய பிறவியின் கர்மப்பலன் இன்றும் உங்களை துரத்துகிறது என்று எதற்கு அநியாயமாக நினைக்கிறீர்கள்? இதுவரை எத்தனை டன் உணவுகள் சாப்பிட்டுள்ளீர்கள்? அதெல்லாம் வயிற்றினுள் தான் போனது. ஆனால் உங்கள் எடை என்ன? நூறு கிலோவுக்கும் கீழே. மீதி எங்கே? உண்ட உணவுகளையே உங்களால் பூட்டி வைக்க முடியவில்லை.முன் ஜென்மத்தில் செய்த கருமங்களை மட்டும் உங்களால் பூட்டி வைக்க முடியுமா? ஓம் நமசிவாய நம.. நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….” ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

Open in Telegram
Views608+32%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5096Text

ஒளவையே...!!! உலகில் அரியது என்ன? அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிது அரிது மானிடர் ஆதல் அரிது! மானிடராயினும்.... கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது! கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்... ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது..! ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...! தானமும் தவமும் தான் செய்தல் அறிது..! தானமும் தவமும் தான் செய்தலாயினும்...! வானவர் நாடு வழி திறந்திடுமே..! கொடியது என்ன? கொடியது கேட்கின் வரிவடி வேலோய்.. கொடிது கொடிது வறுமை கொடிது.. அதனினும் கொடிது.. இளமையில் வறுமை.. அதனினும் கொடிது.. ஆற்றொணாக் கொடு நோய் அதனினும் கொடிது அன்பு இல்லாப் பெண்டிர் அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே! பெரியது என்ன? பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்.. பெரிது பெரிது புவனம் பெரிது.. புவனமோ நான்முகன் படைப்பு.. நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்.. கரியமாலோ அலைகடல் துயின்றோன்.. அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்.. குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்.. கலசமோ புவியிற் சிறுமண்.. புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்.. அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்... உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்.. இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்.. தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....! ஒளவையே, !!! இனியது என்ன? இனியது கேட்கின்! இனியது கேட்கின் தனிநெடு வேலோய்.. இனிது இனிது ஏகாந்தம் இனிது.. அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்... அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்... அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே....! "அரியது கொடியது பெரியது இனியது" - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே.... புதியது என்ன? (இனி வரும் வரிகள்: கண்ணதாசன்) என்றும் புதியது பாடல் - என்றும் புதியது பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது... முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது அறிவில் அரியது... அருளில் பெரியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது முதலில் முடிவு அது முடிவில் முதல் அது மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது..!!!! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..! நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….” ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

Open in Telegram
Views718+55%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5095Text

நாம் எல்லோருமே கடவுளின் சொரூபங்களே..! மன அமைதியும் தவமும்..! எவரிடத்தில் ஆன்ம நாட்டம் மிகுந்திருக்கிறதோ, எவரிடத்தில் அருள் தாகம் ஓங்கியிருக்கிறதோ, எவரிடத்தில் தியானத்தில் அதிக விருப்பமிருக்கிறதோ அவர் மெய்ப் பொருளை அடைந்திடுதல் திண்ணம். நாம் எல்லோருமே கடவுளின் சொரூபங்களே, நாம் அனைவருமே நடமாடும் கடவுளே என்ற பேதமற்ற மனப்பான்மை ஒருவருக்கு வளரும் மட்டும், அவர் தெய்வ சன்னிதியை நெருங்கி விட்டார் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய மனப்பான்மையோடு உடலின் தேவைகள் குறையக் குறைய முகத்தில் மலர்ச்சியைக் காணலாம். இந்த உடலின் தேவைகள் பெருகும் அளவுக்கு ஒருவருக்குத் தன்னைப் பற்றிய எண்ணம் மேலோங்கி விடுகின்றது. நான், எனது, தனது என்ற எண்ணம் இல்லாதவர்கள் மூலம்தான் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்கின்றன. ஆணவம் கொண்ட மனம் தொலைதூரத்தில் இருளில் மயங்கி நிற்கிறது. ஆசை கொண்ட உள்ளம் அமைதியை இழந்து விடுகிறது. அது தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இடைவிடாது போராடுகிறது. ஆனால், இந்த ஆசையை எப்படி ஒழிப்பது ? அதற்கும் ஒரு உபாயம் உள்ளது. *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/J_EXP0wqRw8?sub_confirmation=1 அது என்னவென்றால் நம் ஆசை தீயதாகவோ, நம் தகுதிக்கு மீறியாகவோ உள்ள போதுதான் அதை அடைவதற்கு கடும் மனப் போராட்டமும், உடலில் சக்தி விரையமும் ஏற்பட்டு துன்பப்பட நேரிடுகிறது. அவ்வறில்லாமல் நம் வரம்பிற்கு உட்பட்ட துய ஆசையாக உள்ள போது மனமோ, உடலோ அதிகப் பிரயாசை அடைவதில்லை. மேலும் அந்த ஆசை நம்மை நல்வழிப்படுத்தி, நல்லோர் இணக்கத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. ஏனவேதான் நம் முன்னர்கள் ஆசை தூயதாகவும், ஆழ்ந்ததாகவும் இருந்தால் அது நிச்சயமாக நிறைவேறும் என்றார்கள். பரநாட்டம், அருள் தாகம், பேதமற்ற நிலை, ஆணவமற்ற மனப்பான்மை, ஆசைகளை தூயதாக்கி நெறிப்படுத்திய நிலை, நல்லோர் இணக்கம் இவை அனைத்தும் கூடிய ஒருவரிடம் ஏற்படும் மாற்றமென்ன ? அது என்னவென்றால், அவர் மனம் அமைதியடைந்து, அறிவின் பிரகாசம் ஓங்குகி விடுகிறது. இதனால் அவரின் மனத் தாமரையானது மலர்ந்து தெய்வ சக்தியை தன்னுள் ஏற்று தன்மயமாய் தவமியற்ற தயாராகி விடுகிறது. அறிவு ஓங்கும் அளவிற்கு ஒருவரிடம் மௌனம் விளங்குகிறது. *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/J_EXP0wqRw8?sub_confirmation=1 எனவே மௌனத்தால் மௌனத்தை அடைவது எளிதாக இருக்கிறது. இந்த உலகில் இருளுக்குள்ளே ஒளி பிரகாசிக்கிறது. மரணத்திற்கிடையே உயிர் ஓங்குகிறது, பொய்களுக்கிடையே மெய் மேலிடுகிறது. துன்பங்களுக்கெல்லாம் நடுவில் இன்பமும் நிறைந்திருக்கிறது. இப்படி எல்லாத் தீமைகளையும் இடைவிடாது நீக்கிக் கொண்டே இருக்கிற அந்த வல்லமையான சக்தியே நம் பிறப்படமும், இருப்பிடமுமாகும். அதை அடைய வேண்டும் என்பதே நம் உயிரின் இலட்சியமாகும். அது மட்டுமே நம் இலக்காகும். மற்ற எந்த இலட்சியங்களும் நம்மை மேன்மை படுத்தாது. எனவே மீட்சிக்காண வழி மன அமைதியும், தவமும் மட்டுமே. நன்றி - இராம் மனோகர்.. "ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்" *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/J_EXP0wqRw8?sub_confirmation=1

Open in Telegram
Views693+50%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5094Text
Views428−7%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5093Text

வழிபாடு, பூஜை, பஜனை. சத்சங்கம் இதெல்லாம் எதற்காக ? தவத்தை செய்து இறையாற்றலை நேரடியாக அடைந்து விட வேண்டியது தானே ? இராம் மனோகர் - அதற்குக் காரணம் இருக்கிறது. ஒருவன் இராணுவத்தில் சேர்ந்தவுடனேயே அவன் கைகளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொடுத்து விட மாட்டார்கள். அவன் உடலை, மனதைப் பக்குவப்படுத்தி, மெல்ல மெல்லத்தான் துப்பாக்கி சுடுவதற்கும், மற்ற அதற்கு அடுத்த கட்ட பயிற்சிகளைச் சொல்லித் தருவார்கள். அது போலவே நீங்கள் கூறும் இத்தகைய வழிபாட்டு முறைகள் யாவும் மனதைப் பக்குவப்படுத்தவே உதவுகின்றன. பக்குவப்படாத, அன்பு இல்லாத பேதமுள்ள மனம் ஒரு போதும் பேராற்றலை உணர முடியாது. அந்த எல்லாம் வல்ல சக்தியானது ஈர்க்கும் சக்தியை உடையது. அது தன்னுடைய பிணைப்பாற்றலின் சக்தியைக் கொண்டு எல்லாவற்றையும் ஈர்த்து, இயக்கி வருகிறது. நம் உடலில் அந்த பிணைப்பாற்றல் என்கிற சக்தியின் வெளிப்பாடே அன்பு என்கிற உணர்வாகும். பயமே பக்தி என்பார்கள். அது தவறு. பயம் எப்போதும் இருப்பதில்லை. பயம் தெளியும் போது பக்தி ஓடி விடும். ஆனால் அன்புடைய உள்ளத் தோடு கூடிய பக்தி எப்போதும் நிலைத்திருக்கும். ஏனென்றால் அன்பு ஒன்றே பேராற்றலின் யதார்த்த நிலை. எனவே அன்போடு கூடி பக்தி செலுத்தி இறைவனை வழிபாடு செய்பவர்கள் மனதில் ஈகை, இரக்கம் போன்ற நல்ல குணங்கள் வளரும். தீய குணங்கள் படிப்படியாக விலகிவிடும். அன்பு பெருக்கெடுத்து ஓடும் உள்ளத்தை உடையவன் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிப்பான். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பான். இறைவன் படைத்துள்ள உயிர்களை நேசிக்காதவன், அவற்றின் மேல் இரக்கம் இல்லாதவன், அவற்றின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி அவற்றிற்கு உதவாதவன் இறைவனையே ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் ஒரு கபட நாடக வேடதாரியாகவே இருப்பான். இத்தகையவர்கள் செய்யும் பூஜைகள் சுயநலத்தின் பொருட்டேயாகும். எத்தகைய வழிபாடாக இருந்தாலும் சரி, இரக்க உணர்வையும், ஈகை உணர்வையும் தூண்டாமல் போனால் அது போலி பூஜையே ஆகும். புரட்டு வழிபாடாகும். இறைவனை வழிபடும் போது உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தல் வேண்டுமே அல்லாது அச்சம் எழக் கூடாது. விநயம் இருக்க வேண்டுமே அல்லாது, வியாபார நோக்கம் இருக்கக் கூடாது. சிலர் சொல்வார்கள் இறைவன் எல்லாம் வல்லவன். அவனை அணுகும் போது பயம் வேண்டும் என்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும் மனிதர்களும் ஆலயங்களுக்குச் சென்று ஐயா, நான் எளியவன், பாவி, முட்டாள், அறிவில்லாதவன், ஆற்றலில்லாதவன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று பயத்தோடு வேண்டுவார்கள். தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியே அறியாத இவர்கள் மற்ற உயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். ஒரு குற்றவாளி அரசனுடைய காலில் விழுந்து கதறுவது போல இறைவன் முன்னே நடுங்குகிறார்கள். அல்லது நடுங்குவது போல நடிக்கிறார்கள். இதைக் குறித்துதான் நாதன் உள்ளில் இருக்கிறான் என்று உணராதவர்கள் நட்ட கல்லில் உள்ள இறைவனை எப்படி உணர்வார்கள் ? அவன் இவர்களிடம் எப்படிப் பேசுவான் ? என்று கிண்டலாகக் கேட்பார் சித்தர். இப்படிப்பட்டவர்கள் இறைவனின் கருத்துக்கு மாறாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதே உண்மை. இன்னும் சில பணம் படைத்தவர்களோ அல்லது நடுத்தர வாசிகளோ இறைவனிடம் வியாபாரம் பேசுவார்கள். ஐயா நான் உனக்கு நூறு ரூபாய் செலவு செய்து அபிஷேகம் செய்கிறேன் நீ எனக்கு அதிக பணம் கிடைக்கச் செய்ய வேண்டும். உனக்கு கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்து வைக்கிறேன், என் வியாபாரத்தில் எனக்கு அதிக லாபம் கிடைத்திடச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு வருமானம் பத்து இலட்சம் கிடைத்தால் உன் உண்டியலில் இரண்டு இலட்சம் போடுகிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள், எவ்வளவு கிடைத்தாலும்திருப்தி என்பதே இல்லாமல் இறைவனிடம் போய் எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிச்சைக் காரன் கேட்பது போல கேட்டுக் கொண்டிருப்பார்கள். இல்லாதவர்கள் இருப்பவர்களை நாடி பிச்சை கேட்பது போல இவர்கள் இறைவனிடம் கேட்பார்கள். இதை எல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் பயத்தோடோ, வியாபார நோக்கத்துடனோ, பிச்சைக்காரன் மனநிலையிலோ போய் இறைவனை வேண்டுவது என்பது எந்த வகையிலும் நம்மை மேன்மை அடையச் செய்யாது. மனிதர்களாகிய நம்மிடம் தெய்வத் தன்மை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் வல்லமை மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்து கொண்டு, அன்போடு இறைவனை வழிபடுவதாலும், இறையருள் பெற்ற அருளாளர்களோடு கூடி ஒழுகுவதாலும், பிறர் படும் துன்பங்களைக் களைய நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதாலும் மட்டுமே நம்மால் அகம், புறம் இரண்டையும் அடக்கி வசப்படுத்தி தவநிலைக்கு முன்னேற முடியும்.

Open in Telegram
Views388−16%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5092Text

பிராண சக்தி - பிராணாயாமம்..! பிராணாயாமம் மூன்று நிலைகளாக செய்யப்படுகிறது. முதலில் பூரகம். பூரகம் என்றால் காற்றை உள்ளே இழுத்தல் என்று பொருள். பூரணமாக காற்றை இழுக்கும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருவதே நோய்நொடிகளுக்கும், ஆயுள் குறைவிற்கும் காரணமாகி விடுகிறது. தொடர்ந்து குனிந்து அமர்வதே நம்முடைய சுவாசத்திற்குத் தடையாக இருக்கிறது. அடிக்கடி, பெருமூச்சு, கொட்டாவி வருவதற்குக் காரணம் பிராண சக்தியின் பற்றாக் குறையே. குனிந்து இரையெடுக்கும் கோழி கூட அடிக்கடி நிமிர்ந்து தன் சிறகுகளை அடித்து உடலைத் தளர்த்தி இழுத்து நீளமாகச் சுவாசித்துப் பிராண சக்தியின் குறைபாட்டைப் போக்கிக் கொள்ளும். பூரகமே பூரண காற்றை இழுத்து நம் நுரையீரலின் இயங்காதப் பகுதிகளையும் இயங்கிடச் செய்கிறது. அடுத்து இரேசகம் என்பது நிதானமாகக் காற்றை வெளியே விடுவதாகும். துருத்தியில் புஸ் புஸ் என்று காற்றை வேகமாக வெளியே தள்ளுவது போலத் தள்ளினால் யாதொரு பயனுமில்லை. நிதானமாக வெளியே விடும் போதுதான் நாடிகள் சுத்தமடையும். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையே கும்பகம். சித்தர்கள் பல அதிசய சித்திகளை இந்தக் கும்பக நிலையில்தான் அடைந்தார்கள். அவர்கள் பூரகத்தை அதிகரித்து இரேசகத்தை குறைத்து, கும்பக நிலையில் நீண்ட நேரம் நிலைத்திருப்பார்கள். இந்நிலையில் இழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராண சக்தி முழுவதையும் பெற்றுக் கொள்வதால் அளவிட முடியாத பேராற்றல் உருவாகும். இதில் இலக்கை எட்டும் வரை பிரம்மச்சரியம் காப்பது அவசியம். பிராண சக்தியின் திணிவு ஏற்படும் போது மூளையிலுள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. மூளை தெளிவடைந்து புத்துணர்ச்சி பெறுவதால் மனம் ஒரு நிலைப்பட்டு ஒரு நிலையில் குவிந்து நிற்பது எளிதாகிறது. கண்கள் பிரகாசிக்கும். பார்வைக் குறைபாடுகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். காச நோய், ஆஸ்துமா , நிமோனியா போன்ற நோய்கள் விலகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நம் முன்னோர்கள் நடந்தேதான் எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். அப்படிச் செல்லும் போது நிமிர்ந்து நடப்பார்கள். அதுபோல அவர்கள் அமரும் போதும் நிமிர்ந்துதான் அமர்வார்கள். இதனால் முதுகெலும்பு வளையாமல் அதற்கு முன்னால் அமைந்திருக்கும் நுரையீரலும் நீளவாக்கில் இழுக்கப்பட்டு அதிலுள்ள இலட்சக் கணக்கான காற்று நுண்ணறைகளும் விரிவடைந்து பிராண வாயு அந்த அறைகளுக்குள் செல்ல ஏதுவாகிறது. இதனால் நுரையீரலின் செயல் திறன் கூடுகிறது. எனவே குனிந்து அமர்வது, கூன் விழுந்த நடை, தொய்வாக அமர்வது, சுருண்டு படுப்பது இவற்றையல்லாம் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இவற்றால் நாம் பூரண சுவாசத்தைப் பெற முடியாமல் போய் விடுகிறது. இந்த பிராண சக்தி உலகமெல்லாம் பரவி நின்றாலும், பிராண வாயு நம் பூமியில் மட்டுமே இருக்கிறது. எனவேதான் இங்கே ஜீவராசிகள் தோன்றி வாழ்கின்றன. ஏனென்றால் சுவாசத்தின் மூலம் நாம் பிராண சக்தியை பெற்றுக் கொள்வதோடு பிராண வாயு நம் உடலில் பத்து விதமாகப் பிரிந்து செயலாற்றி நம் உயிரைப் பாதுகாக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பிராண சக்தி உடலில் அதிகரிக்கும் போது ஏற்படும் உஷ்ணமே குண்டலினியைக் கிளப்புவதற்கும், சுழுமுனை நாடி திறப்பதற்கும் காரணமாக அமைகிறது. நன்றி - இராம் மனோகர்.. "ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

Open in Telegram
Views340−26%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5091Text

பிராண சக்தி..! பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுப்படுத்துவது என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் பிராணன் என்றால் மூச்சு அல்ல. பிராணவாயுவுமல்ல. ஆனால் பிராண வாயுவின் மூலம் பெறக் கூடிய சக்தி அது. சுவாசத்தைத் தூண்டுவதும், அந்த சுவாசத்திற்குள் சக்தியாக இருப்பதுவும் பிராண சக்தியே. சில நூல்களில் இந்திரியங்களையும், மனதையும் கூட பிராணன் என்று சொல்வதுண்டு. எது செயல்களின் மூலம் தோற்றத்திற்கு வருகிறதோ அதை சக்தி என்போம். ஆனால், பிராணனோ செயலாக பரிணமிக்காமல் அடிப்படை மூலசக்தியாகத் திகழ்கிறது. இந்த உடலில் மட்டுமல்ல உலகில் கணப்படுபவை எல்லாம், இயங்குகிற எல்லாம் பிராணனின் சக்தியாலேயே இயங்குகின்றன. எனவே பிராணன் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஆதாரசக்தியின் பொதுப் பெயர். பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்களின் தொகை பிராணன் எனப்படுகிறது. பிரளய காலத்தில் ஒடுங்கியிருக்கிறது. சிருஷ்டியின் போது இயக்கத்துக்கு வருகிறது. உயிர்களின் நாடி, நரம்புகளிலெல்லாம் செயலாகத் திகழ்வது பிராணனே. எண்ணமாக வடிவெடுப்பதுவும் பிராணனே. அப்படியானால் இதுவே ஆதார சக்தியாக இருக்கும் போது, இது எதில் போய் ஒடுங்குகிறது ? என்ற கேள்வி எழும். அது ப்ரம்மத்தில் போய் ஒடுங்குகிறது. சிருஷ்டி காலத்தில் அந்த ப்ரம்மத்தின் சலிப்பில் எண்ணமாய் வெளிப்படும் ஆதி சக்தியே சிவனாகவும், சக்தியாகவும் வெளிப்படுகிறது. சிவன் என்பது ஸ்தூல வடிவத்தின் வித்து, சக்தி என்பது சூக்கும சக்தியின் வித்து. இந்த இரு பெரும் சக்திகளின் சேர்க்கையே இந்தப் பிரபஞ்சம். இந்த சிவமாகிய ஆகாசத்தோடு பிராணனாகிய சக்தியின் கூட்டுறவால் வந்ததே இந்தப் பிரபஞ்சம். நம் மானிட சரீரமும் அப்படி வந்ததே. நாம் நுகருகின்ற மற்ற பூதங்களும் ஆகாசத்திலிருந்து வந்தவையே. அவற்றின் தன்மாத்திரையான சூக்கும சக்தியாக பிராணன் திகழ்கிறது. இந்த சிவசக்தி ஐக்கியமாகி ப்ரம்மத்திலிருந்து வெளிவந்த நிலையையே பெண்ணாக உருவகப்படுத்தி ஆதிபராசக்தி என்று வணங்குவார்கள். இப்படிப்பட்ட சூக்கும, ஆதார மூல சக்தியாகத் திகழும் பிராண சக்தியைக் நம் உடலுக்குள் நிலை நிறுத்திக் கையாளுவதையே பிராணாயாமம் என்கிறோம். இதனால் நம் தூல சரீரமும், சூக்கும சரீரமும் பலப்படும். இந்த பிராணனே மனமாக விளங்குவதால் மனோசக்திகள் பெருகும். எனவே மனம் சலனமடையாமல் எளிதில் வசப்பட்டு ஒருநிலைப் பாங்கு வாய்க்கும். யோக சாஸ்திரம் அருளிய பதஞ்சலி முனிவர் இந்த பிராணாயாமத்தை வெகு சிறப்பாகச் சொல்லவில்லை. சிறிதளவு பழகினால் போதும் என்கிற அளவே அவர் சொல்லியிருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த சித்தர்களே பிராணாயாமம் குறித்து பல விவரங்களைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். இந்த பிராண சக்தியை நம் தேகத்தில் நிலைநிறுத்தப் பழகும் போது நம் சிந்தனாசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி மூன்றும் நன்கு செயலாற்றுகின்றன. நம் சித்தமானது பிராணனை ஏற்றுக் கொண்டு பல்வேறு சக்திகளாக அதை மாற்றுகிறது. எனவே உடலை அழியாமல் காக்க முடிகிறது. பிராணசக்தியின் மூலம் உடலின் பல்வேறு இயக்கங்களையும், நாடி நரம்புகளையும் நாம் வசப்படுத்தலாம். இதையே சித்திகள் என்கிறோம்.. தொடரும்..! "ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

Open in Telegram
Views413−11%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5090Text

ஞானவிழிப்பு என்றால் என்ன? நீங்கள் இரவு ஆழ்ந்த உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களின் மனைவி என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்துகிறார் நீங்கள் உடனே எழுந்து என்னாச்சு என்று கேட்கும் பொழுது கப்பலில் இருந்து கீழே விழுந்து விட்டேன் கடலில் முதலை என்னை கவ்விக்கொண்டு இழுத்துச் செல்கிறது காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்கிறார் இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு நீண்ட கத்தியை எடுத்துக்கொண்டு அவர் எந்த க் கடலில் விழுந்துவிட்டார் என கேட்டு அங்கு நீங்கள் சென்று அந்த முதலிடம் சண்டை போட்டு உங்கள் மனைவியை காப்பாற்றுவீர்களா? அல்லது அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி விடுவீர்களா? நீங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பி விட்ட உடன் அந்த கப்பல் கடல் முதலை உடல் இவரின் உடல் சிந்திய ரத்தம் எல்லாம் மறைந்து போகிறது மாயமாகி போகிறது அல்லவா மனித அவஸ்தை என்னும் அனுபவங்களில் இது வேறு ஒரு பரிமாணத்தில் நிகழக்கூடியது அந்த கனவை நீங்கள் தீர்மானிப்பதில்லை உங்களின் மனமே கனவை தீர்மானித்துக் கொள்கிறது இந்த கனவின் நுட்பத்தை சற்றுகூர்ந்து பாருங்கள் ஒருவர் இந்த ஊரில் இந்த வீட்டில் இந்த மெத்தையில் படுத்துக்கொண்டு நான் ஒரு கனவே காண்கிறேன் என அவர் கனவை காண்பதில்லை அதாவது கனவை காண்பவனான அந்த நபர் இங்கேதான் படுத்து உறங்குகிறார் ஆனால் கனவில் உடல் எடுத்த அந்த *மனோ மய நான்* இன்பத்தில் சந்தோஷிக்கிறது துன்பத்தில் துடித்து துவள்கிறது இறைவா இறைவா என கதறுகிறது ஆனால் கனவு காணும் இவர் எந்தவித துன்பத்திற்கும் ஆளாவதில்லை இவர் இங்கு சுகமாக உறங்குகிறார் விழித்த பிறகு அது நிஜமில்லை என புரிந்து கொள்கிறார் வாழ்வும் நீங்கள் தீர்மானித்தது போல் உங்களுக்கு தோன்றினாலும் அது மனதின் எதிர்வினை காரணிகளால் அமைக்கப்படுகிறது அல்லது எதிர்வினை தூண்டல்களால் அமைக்கப்படுகிறது இந்த வாழ்வை அனுபவிக்க கூடிய அந்த ஆத்மா எந்தவித பாதிப்பும் இன்றி தன்னுள் சலனமற்றே இருக்கிறது அனுபவிப்பவனாக தன்னை பாவித்து கொள்கிற *மனோமய நான்* என்ற இந்த முடிச்சு மட்டுமே துன்பத்தில் துவண்டு போகிறது இன்பத்தில் கூத்தாடுகிறது தூக்கத்திலிருந்து விழிப்பு பெறுவது போல இந்த எதிர்வினை காரணிகளிலிருந்து விழிப்பு பெற்று விட்டால் அதுவே *ஞான விழிப்பு ஆன்ம விழிப்பு* எனப்படுகிறது இந்த வாழ்வு இன்பத்தையும் துன்பத்தையும் கடந்ததாக அனுபவம் ஆகிறது இவ்வாறு விழிப்பு பெற்ற உணர்வு இன்பத்தை இன்பத்தால் தூண்டப்படுவதும் இல்லை துன்பத்தால் துன்பப்படுவதும் இல்லை அது சமநிலை பெற்று விடுகிறது அப்பொழுது அது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை இழந்து விடுவதால் இறைவனில் லயமாகி போகிறது.. ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

Open in Telegram
Views826+79%vs avg
Forwards—
Reactions1
Comments—
#5089Text

குருவின் வல்மையான ப்ராண சக்தியானது சீடனுக்குள் புகுந்து அவனை நல் வழியில் செலுத்த ஆரம்பிப்பதையே தீட்சை என்கிறோம்..! வீடு பேற்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு உள்ளவர்கள் மனம் தீமையை இயல்பாகவே விலக்கி விடும். அவ்வாறு தீமையை விலக்குவதால் நன்மையும், உண்மையுமான இறைவனை நோக்கி மனம் திசை மாறும். இது இயல்பான இயம யோகமாகும். இந்த இயம நிலையில் உள்ளவர்களைத் தேடி குருவானவர் வருவார். வருவார் என்றால் அவர் நாம் இருக்கும் இடத்திற்கு வருவார். அதை நாம் புரிந்து கொண்டு, அவரை உணர்ந்து கொண்டு அவரை சரண் புகுந்து கொள்வோம். குரு என்றால் பெரியவர் அல்லது இருட்டை விலக்குபவர் என்று பொருளாகும். பொதுவாக மனிதனின் ஆதி குரு சிவன் என்பார்கள். ஆரம்ப குரு மாதாவும், பிதாவுமே. இதிலும் கூட ஒரு சூக்குமம் உள்ளது. தாய், தந்தையர் ஸ்தூல உலகில் உலகாயத்தில் நமக்கு குருவாக இருப்பது உண்மைதான். ஆனால் உயிர்கள் என்ற பொதுவான நிலையில் மாயையான மாதா பரா சக்தியே சூக்கும நிலையில் குரு ரூபிணியாகத் திகழ்கிறாள். அவள், மீன் தனது முட்டையை கண்ணால் பார்த்தும், ஆமை தன் முட்டையை மனதால் நினைத்தும், கோழி தன் முட்டையைத் தொட்டும் அடைகாத்து அருள்வது போல் உயிர்களை மூன்று நிலைகளில் சூக்கும குருவாக நின்று பக்குவப்படுத்துகிறாள். இதையே மச்ச தீட்சை, குக்குட தீட்சை, கமட தீட்சை என்பார்கள். உலகுக்கே தந்தையான சிவனே ஆதி குருவாகத் திகழ்ந்தாலும் தன் மகனாகிய முருகனையே குருவாகக் கொண்டு உபதேசம் பெற்று சற்குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதால் அவர் ஆதி குரு மட்டுமல்ல, ஆச்சாரியன் என்ற நிலையையும் பெறுகிறார். ஆச்சாரியன் என்றால் நடந்து காட்டுபவர் அல்லது ஒரு சம்பிரதாயத்தில் இறங்கி வாழ்ந்து காட்டுபவர் என்று பொருள். குரு என்பவர் உள் மனம், தவம், அறிவு இவற்றை தெளிவிப்பவர். குருவானவர் பேச வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது. மௌனமாகவே இருந்தும் அதாவது சூக்கும நிலையிலும் கூட நல்வழிப் படுத்துவார். இதையே மௌனகுரு என்பார்கள். தக்ஷிணா மூர்த்தியும் கூட மௌனகுரு என்று சொல்லப்படுவதுண்டு. சிவன் முருகனிடமும், பராசக்தி சிவனிடமும், ராமர் வசிஷ்டரிடமும், கண்ணன் சாந்தீபனிடமும் உபதேஷம் பெற்று குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதாகச் சொல்வார்கள். தாத்தாத்ரேயரோ ஒருபடி மேலே போய் உலகில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், உயிரினங்களிடமிருந்தெல்லாம் பாடம் கற்று இயற்கையையே குருவாக அடையாளப்படுத்தினார். குருவுக்கும் சீடனுக்கும் ஏற்படும் தொடர்பே தீட்சை. குருவின் வல்மையான ப்ராண சக்தியானது சீடனுக்குள் புகுந்து அவனை நல் வழியில் செலுத்த ஆரம்பிப்பதையே தீட்சை என்கிறோம். இது மந்திர ரூபமாகவோ, ஸ்பரிசமாகவோ, கண்பார்வை மூலமாகவோ, எண்ணத்தின் மூலமாகவோ நடை பெறும். குருவானவர் சீடனோடு சூக்குமத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார். கேள்விகள் கேட்டுத் தெளிபவனை விட குருவின் உபதேஷத்தை எந்த வித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்பவன் விரைவில் மேன்மை அடைவான். ஓம் சற்குருவே போற்றி. அவர் தம் கருணையே போற்றி. சற்குரு பெருமானின் திருப் பாதங்களே சரணம். *"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"* *"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

Open in Telegram
Views843+82%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5088Text

அதன்படியே, தினமும் அக்னி ஹோத்ரம் செய்யும் நாராயண சாஸ்திரி என்ற அந்தணருக்கும், கமலா என்ற அம்மைக்கும் பூரி ஜெகன்னாதரின் அருளால், ஒடிஸ்ஸா மாநிலத்தில் அவதரித்தார் வியாசர். சிறு வயதிலேயே தெய்வ பக்தி நிரம்பியவராகவும் ஆசாரசீலராகவும் இருந்தார். தெய்வாம்சம் பொருந்திய குழந்தையாக இருந்ததால் ஜெயதேவர் என்ற நாமம் சூட்டினார்கள். தக்க வயது வந்தவுடன், கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்த பத்மாவதி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தனர். எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிக்கொண்டும் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டும் தம்பதிகள் இறையின்பத்திலேயே இருந்தனர். ஜெயதேவர் எல்லா தெய்வங்கள்மீதும் பேதமில்லாமல் பாடல்கள் இயற்றினார். ருத்ர கிரந்தம் என்ற நூலை எழுதினார். ராகவகிரந்தம் என்ற நூலையும் இயற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீகிருஷ்ணனிடம் எல்லையில்லாத பிரேமை கொண்டு, 18 புராணங்களையும் இணைத்து கீதகோவிந்தம் என்ற மகாகாவியத்தை எழுதினார். ஜெயதேவரின் மகிமைகளை அறிந்த பகவன்தாஸ் என்ற மன்னர், சில நாட்கள் ஜெயதேவரை தன் அரண்மனையில் வைத்து உபசரித்து, அவரக்கு ஆடை, ஆபரணங்கள், பொன், பொருள், எல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/HaLZ9gWsqjg ஜெயதேவர் ஒரு கானகத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, நான்கு திருடர்கள் அவரை சுற்றி வளைத்தனர். ஜெயதேவரின் கை, கால்களை வெட்டி ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, அவர்வசமிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த சமயம் காட்டில் வேட்டையாட வந்த மன்னன் (கிரவுஞ்சன்) ஜெயதேவர் கிணற்றில் இருப்பதைக் கண்டு, மெள்ள அவரை மேலே தூக்கி முதலுதவிகள் செய்து, பின்னர் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தான். ஜெயதேவரின் இனிய குரலையும், அவரது பக்தியையும் கண்ட கிரவுஞ்ச மன்னன் சுவாமிகளிடம் அன்பைப் பொழிந்தான். அஷ்டபதி பாடுவதும், பாகவத பிரவசனமும் சுவாமிகள் மூலம் கிடைத்தன. ஜெயதேவர் ஒரு பாகவதமேளா நடத்த வேண்டுமென்று மன்னரிடம் கேட்டார். அதன்படி மன்னன் நகரிலுள்ள பாகவதர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக பாகவத மேளா நடத்தினான். அந்த பாகவத மேளாவுக்கு, முன்பு ஜெயதேவரை கிணற்றில் தள்ளிய கள்வர்கள் நால்வரும் பாகவதர்கள்போல வேடம் பூண்டு வந்திருந்தார்கள். அரண்மனையில் சுவாமிகளைக் கண்டவுடன் இவன் திருடன், திருடன் என்றனர். கள்வர்கள் சுவாமிகளைப் பற்றி அபாண்டமான பதிலைச் சொன்னதும் பூமி வெடிக்க, அந்த நால்வரும் அந்த பள்ளத்தில் விழுந்தனர். இதைக் கண்ட ஜெயதேவர் கள்வராக இருந்தாலும் பாகவதர்களாக சில நாட்கள் இருந்தார்களே என்றெண்ணி, பாகவத அபசாரம் என்று சுவாமிகளும் அந்தப் பள்ளத்தில் விழுந்தார். *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/HaLZ9gWsqjg இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிரவுஞ்ச மன்னனும், தான் குருவாக நினைத்து வழிபட்ட சுவாமிகளே விழுந்துவிட்டாரே என்று தானும் பள்ளத்தில் குதித்தான். அப்பொழுது அகிலாண்டேஸ்வரனான பரமேஸ்வரன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சுவாமிகளையும், மன்னனையும் காப்பாற்றியருளினார். வியாசரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்ற மகா காவியத்தை எழுதி கிருஷ்ணன் அருளைப் பெற்றார். இது தேவரகசியம் என்றும்; ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நாபாஜி சித்தருக்கு இந்த வரலாற்றைக் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது. யாராக இருந்தாலும் தான் என்ற அகங்காரம் இருந்தால் அதற்கான தீவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதே நியதி. பெரிய மகான்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரணமான மானிடர்கள் எப்படி இருக்கவேண்டும். எத்தனை இருந்தாலும் அகம்பாவம் நம்மை அண்டவே கூடாது! வியாசாய விஷ்ணு ரூபாய, வியாச ரூபாய் விஷ்ணவே.. *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/HaLZ9gWsqjg

Open in Telegram
Views674+46%vs avg
Forwards—
Reactions—
Comments—
#5087Text

வியாசாய விஷ்ணு ரூபாய, வியாச ரூபாய் விஷ்ணவே.. வியாசர் யார் ? வியாசரை பரமாத்மா ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் என்பர். பதினெட்டு புராணங்களையும் ஐந்தாவது வேதமான மகாபாரதத்தையும் எழுதியவர். வேதத்திற்கே வியாசம் எழுதி வேதவியாசர் என்று கீர்த்தி பெற்றவர். ஸ்ரீமத் பாகவதம் என்ற அமுதத்தை அருளியவர். வேத வியாசர் பதினெட்டு புராணங்களிலும், ஒவ்வொரு தெய்வத்தை பெரிதென்று கூறுகிறார். பிரும்ம புராணத்தில் பிரும்மம் தான் பெரியது என்றும்; விஷ்ணு புராணத்தில் விஷ்ணுவைக் காட்டிலும் பெரியவர் இல்லையென்றும்; கந்தபுராணத்தில் கந்தன்தான் பெரியவன் என்றும்; தேவி பாகவதத்தில் தேவிதான் எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள் என்றும்; சிவ புராணத்தில் சிவபெருமான்தான் அனைத்திலும் உயர்ந்தவர் என்றும்- இப்படி ஒவ்வொரு புராணத்திலும் எந்தக் கடவுளை முன்வைத்து எழுதுகிறாரோ அந்தக் கடவுளை மற்ற தெய்வங்கள் பூஜித்து வணங்குவதாக எழுதுகிறார். ஆனால் பிரும்மாண்ட புராணத்தில், தெய்வங்களுக்குள் வித்தியாசம் கிடையாது; எல்லாமே ஒன்றுதான் என்று எழுதி முடித்தார். அனைத்தையும் எழுதி முடித்த வியாசர் இறுதியில் பூதவுடலை உகுத்து விண்ணுலகம் செல்ல விரும்பினார். காசிக்குச்சென்று கங்கையில் முழங்கால் அளவு நீரில் நின்று அபராதக்ஷ மாயாசனம் (தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோருதல்) செய்து விட்டு, நாராயணனைக் காட்டிலும் வேறு பெரிய தெய்வத்தை நான் அறியவில்லை என்று கூறினார். அந்த நேரத்தில் நந்திகேஸ்வரர் கங்கையில் நீராட வந்திருந்தார். சரீரம் விடப்பட வேண்டிய நேரத்தில் வியாசர் சொன்னது நந்தி பகவானுக்குக் கேட்க, வியாசனே, ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு தெய்வத்தைப் பெரிதாகக் கூறினாய். முடிவில் பிரும்மாண்ட புராணத்தில் எல்லாமே ஒன்றுதான் என்று தெரிவித்தாய். தற்சமயம் நாராயணனே பெரியவர் என்று சொல்லிக் குழப்புகிறாய். சிவ க்ஷேத்திரத்தில், சிவ பக்தனான நான் அருகில் நின்று கொண்டிருக்கும் போதே சொன்னதை மாற்றிச் சொல்கிறாய். எனவே அபராதக்ஷ மாயாசனம் செய்வதற்காக தூக்கப்பட்ட உனது கைகளும், நீரில் அழுந்திய கால்களும் துண்டிக்கப்படட்டும் என்று நந்திகேஸ்வரர் சாபம் கொடுத்தார். *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/HaLZ9gWsqjg இதைக் கேட்டு சிரித்த வியாசர், நந்தி பகவானே, நான் சரீரத்தை விடும் நேரம் நெருங்கிவிட்டது. காசியில் இறந்தால் முக்தி. எனவே நான் நேராக முக்தி அடைந்துவிடுவேன். உமது சாபம் பலிக்காது என்று கூறினார். அதற்கு நந்தி வியாசனே, நீ மீண்டும் ஒரு பிறவி எடுக்கப்போகிறாய், அப்போது நான் கொடுத்த சாபம் பலிக்கும் என்றார். நந்தியே, காசியில் இறந்தால் மறுபிறவியில்லை என்பதை நீ அறியவில்லையா? என்று கேட்டார் வியாசர். வியாசனே, காசியில் இயற்கையாக இறப்பவருக்குதான் முக்தி. தானாக உயிரை விடுபவருக்கு முக்தி கிட்டாது என்றார் நந்தி. வியாசர் சற்று அதிர்ச்சியடைந்து, நந்தியின் கால்களில் விழுந்து, என்னை மன்னித்து சாபவிமோசனம் தர வேண்டும் என்று வேண்டினார். சிவ பக்தனான நந்தி கொடுத்த சாபம் பலித்தே தீரும். உனது கை, கால்கள் துண்டிக்கப்பட்டு நீ துன்பப்படும் வேளையில், அந்த பரமேஸ்வரனே உனக்கு தரிசனம் தந்து, இழந்த கை, கால்களை மீண்டும் அருளுவார் என்று அருளினார் நந்தி. வியாசரும் மனம் தெளிந்து, கங்கையில் தனது சரீரத்தை விட்டுவிட்டு சொர்க்கம் சென்றார். அங்கே தேவேந்திரனும், மற்ற தேவர்களும் பூரண கும்பத்துடன் வியாசரை வரவேற்றார்கள் . பதினெட்டு புராணங்களை இயற்றி, பல தத்துவங்களை போதித்த என்னையன்றி இப்படிப்பட்ட வரவேற்பு வேறு யாருக்குக் கிட்டும்? என்னைப் போன்ற புராண கர்த்தா எவருமே இல்லை என்ற ஆணவத்தோடு சென்றார் வியாசர். தேவேந்திரன் ஒரு ஆசனத்தைக் காட்டி அமரச் சொன்னான். அந்த ஆசனத்தைக் கண்டதும் வியாசர் அதிர்ச்சியடைந்தார். காரணம், முள்ளால் நிரப்பப்பட்ட ஒரு ஆசனம் அது. வியாசர் கோபமுற்று, தேவேந்திரா, என்ன இது? நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாருமே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எழுதிய எனக்கு இப்படி ஒரு ஆசனமா? என்றார். அந்த சமயம் பரம்பொருளான நாராயணர் அங்கே தோன்றினார். வியாசா, நீ சொன்னது எல்லாம் உண்மையே! நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாரும் உயர்ந்த இடத்தைப் பெறட்டும் என்று எழுதியிருந்தாய். அவர்கள் உனது புராணங்களைப் படித்து, கேட்டு, அனுபவித்து பக்திப்பரவசம் கொண்டனர். *இந்த பதிவின் வீடியோ*:- https://youtu.be/HaLZ9gWsqjg ஆனால் நீ எழுதினாயே தவிர அதை அனுபவிக்கவில்லை. நான்தான் எழுதினேன் என்ற அகங்காரமும் கொண்டாய். அதனால் நீ இன்னொரு பிறவி எடுத்து அனுபவித்துவிட்டு வா. உனக்கு உயர்ந்த பதவி கிட்டும். நந்தியின் சாபமும் நிறைவேற வேண்டும் என்று கூறி மறைந்தார்.

Open in Telegram
Views560+21%vs avg
Forwards—
Reactions—
Comments—