Positivity is for you if you believe in kindness, growth, and hope 💪 Subscribe & be part of the positivity movement 👍 ❇️ @Positivity_Said
Открыть в Telegram
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International. More Links: @TGLinksOLBN
Средние просмотры поста по дням
По дню публикации
Показать таблицей
| Дата | Просмотров на пост |
|---|---|
| 13 нояб. 2026 г. | 306 |
| 15 нояб. 2026 г. | 286 |
| 21 нояб. 2026 г. | 159 |
| 23 нояб. 2026 г. | 131 |
| 24 нояб. 2026 г. | 48 |
Самые просматриваемые за месяц
- 01Просмотры306Пересылки—Реакции—Комментарии—
- 02Просмотры286Пересылки—Реакции2Комментарии—
- 03Просмотры159Пересылки—Реакции—Комментарии—
- 04Просмотры136Пересылки—Реакции—Комментарии—
Новые посты
EPF Balance பார்க்க இனிமே Website க்குப் போக வேண்டாம். WhatsApp லேயே பார்த்துக்கலாம். வழக்கமா நம்ம PF Account ல எவ்வளவு பணம் இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா EPFO Website க்குப் போகணும். Login பண்ணணும். சில நேரம் Website Open ஆகாம வேற டென்ஷன் கொடுக்கும். ஊரு பூரா சுத்த விடும் ஆனா நம்ம பணத்த மட்டும் சீக்கிரம் கண்ணுல காமிக்காது. இப்ப அதுக்கெல்லாம் ஒரு சுலபமான வழி வந்திருக்கு மக்களே. EPFO, WhatsApp மூலமாவே PF Balance, Last 5 Transactions, Passbook எல்லாத்தையும் பார்க்கிற வசதியைக் கொண்டு வந்திருக்கு. இந்த வசதி November 1, 2026 ல அறிமுகப்படுத்தப்பட்டது. இதுல சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? வசதி அறிமுகமாகி 14 நாட்கள்ல மட்டும் 89.88 லட்சம் பேர் தங்களோட EPF Balance ஐ Check பண்ணியிருக்காங்க. 41.79 லட்சம் பேர் Passbook Download பண்ணியிருக்காங்க. 16.18 லட்சம் பேர் கடைசி 5 Transactions ஐ பார்த்திருக்காங்க. அந்த அளவுக்கு இந்த வசதியை மக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. ஏன்னா வாங்குனது அவ்வளவு அடி... சரி. நம்ம PF Balance ஐ எப்படி பார்க்கிறது? உங்க WhatsAppல +91 8796441800 என்ற EPFO Numberக்கு Hi அனுப்புங்க. உங்களுக்குத் தேவையான Language ஐ தேர்ந்தெடுங்க. தற்போது 10 மொழிகளில் இந்த வசதி இருக்கு. Check Balance, Last 5 Transactions, Download Passbook ன்னு Options வரும். தேவையானதை Select பண்ணுங்க. உங்க Registered Mobile Number க்கு வரும் OTP மூலமா Verification அ முடிங்க. உங்களோட Member ID ஐ Select பண்ணுங்க. பழைய Company களோட Member ID இருந்தாலும் அதையும் தேர்ந்தெடுக்கலாம். அவ்ளோதான். உங்க PF Balance, Employee Contribution, Employer Contribution, Pension Contribution, Latest Contribution போன்ற விவரங்களைப் பார்க்கலாம். Passbook ஐ Password Protected PDF ஆகவும் Download பண்ணிக்கலாம். ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. WhatsApp ல EPFO பேர்ல வர்ற எல்லா Messages ஐயும் நம்பாதீங்க. Official Number சரியா இருக்கான்னு Check பண்ணுங்க. தெரியாத நபர்கள் அனுப்புற Links ஐ Click பண்ணாதீங்க. உங்க Password, OTP, Bank Details போன்றவற்றை யாரிடமும் பகிராதீங்க. EPFO வோட Official WhatsApp Service க்கும், Updates கொடுக்கிற WhatsApp Channel க்கும் வித்தியாசம் இருக்கு. PF Balance பார்க்க மேலே சொன்ன Number ஐ மட்டுமே பயன்படுத்தணும். EPFO அறிவிப்புகளை மட்டும் தெரிஞ்சுக்கணும்னா WhatsApp Updates பகுதியில் Official EPFO Channel ஐ Follow பண்ணலாம். மொத்தத்துல சொல்லணும்னா... நம்ம சம்பளத்துல மாதாமாதம் PF பிடிக்கிறாங்க. Employer ம் Contribution பண்றாங்க. ஆனா அந்தப் பணம் எவ்வளவு சேர்ந்திருக்குன்னு நம்மள்ல எத்தனை பேர் Regular ஆ Check பண்றோம்? இனிமே அதுக்கும் ஒரு சுலபமான வழி கிடைச்சிருக்கு. WhatsAppல குடும்பத்தினர், நண்பர்களோட Messages மட்டும் பார்க்காம, நம்ம PF Balance ஐயும் அவ்வப்போது பார்த்துக்கோங்க மக்களே. @OLBNNews
Открыть в Telegramடாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM 🔞 https://t.me/DocAntharangam ♂ பாலியல் மருத்துவம் ♀ ஆலோசனைகள் ♂ குடும்பநல தகவல்கள் ♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள் ♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் ♀ பாலியல் கல்வி டாக்டர் அந்தரங்கம்: 🔞 https://t.me/DocAntharangam Top Links: @TL_Links
Открыть в Telegramபணம் — 95% சிக்கல்களைத் தீர்க்கிறது.. உடற்பயிற்சி — 80% நோய்களைத் தடுக்கிறது.. உதாசீனப்படுத்துதல் — 80% தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.. வாசிப்பு — உங்கள் விதியின் 60%-ஐத் தீர்மானிக்கிறது.. 'வேண்டாம்' என்று மறுப்பது — 90% மனப்போராட்டங்களைக் குறைக்கிறது.. அமைதி காப்பது — 70% வாக்குவாதங்களைக் குறைக்கிறது.. சுயக்கட்டுப்பாடு — உங்கள் செயல்பாட்டு வேகத்தில் 70% கட்டுப்பாட்டைத் தருகிறது.. செயல்பாட்டை மீள்பார்வை செய்வது — 70% தேவையற்ற திசைமாற்றங்களைத் தவிர்க்க உதவுகிறது.. பயிற்சி — உங்கள் திறன்களில் 80%-ஐ உருவாக்குகிறது.. செயலில் இறங்குவது — உங்கள் இலக்குகளில் 80%-ஐ அடைய உதவுகிறது.. சீக்கிரம் உறங்கச் செல்வது — உங்கள் ஆற்றலில் 90%-ஐ மீட்டெடுக்கிறது.. சகிப்புத்தன்மை — வெறுப்பில் 30%-ஐக் குறைக்க வல்லது.. நேர்மை — நம்பிக்கையில் 30%-ஐப் பெற்றுத் தருகிறது.. கடின உழைப்பு — தொழில்முறை வெற்றியில் 50%-ஐ உருவாக்குகிறது.. விடாமுயற்சி — 90% தடைகளைத் தாண்டிச் செல்ல உதவுகிறது.. கவனம் — உங்கள் செயல்திறனை 70% வரை அதிகரிக்கிறது.. சேமிப்பு — பாதுகாப்பான உணர்வை 80% வரை அதிகரிக்கிறது.. புன்னகை — மனிதர்களுக்கு இடையிலான இடைவெளியில் 40%-ஐக் குறைக்கிறது! 👍👍👍
Открыть в Telegramt.me/AccuPoints 📌 Acupuncture Treatment 📍 Acupressure Points 🧬 Varma Kalai An olden treatment; it's Golden treatment 📍 @AccuPoints
Открыть в Telegram"தன்னைத் தானே புறக்கணிப்பதன்" ஆபத்தான அறிகுறிகள் 5-வது இடம்: கழிவறைக்குச் செல்வதைத் தள்ளிப்போடுதல் ・செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று நினைப்பது ・செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்த விருப்பமின்மை ・தெரியாமலேயே, அடக்க முடியாத எல்லை வரை அதைத் தள்ளிப்போடுவது 4-வது இடம்: குளிப்பதைத் தவிர்த்தல் ・எப்படிப் பார்த்தாலும் குளிப்பது ஒரு பெரிய வேலையாகத் தெரிவது ・பல் துலக்குவதைக் கூடத் தள்ளிப்போடுவது ・உடை மாற்றுவதற்குக்கூடச் சக்தியில்லாமல், ஆர்வமில்லாமல் உடுத்திய உடைகளையே மீண்டும் உடுத்துவது. 3-வது இடம்: அரைகுறையான அல்லது கவனக்குறைவான உணவுமுறை ・வயிறு பசியால் உறுமினாலும், சாப்பிடுவது ஒரு பெரிய சிரமமாகத் தெரிவது ・சரியான காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், காபி, டீயை மட்டுமே நம்பியிருப்பதால் சத்துணவு குறைபாடு ஏற்படுவது. ・குடும்பத்தினருக்குச் சிறப்பாகச் சமைத்தாலும், தனக்கு என்று வரும்போது சுருக்கிக்கொள்வது 2-வது இடம்: உடல் அல்லது மனதின் சோர்வு சமிக்ஞைகளைப் புறக்கணித்தல் ・மிகவும் சோர்ந்து போயிருந்தாலும், "இன்னும் கொஞ்சம் சமாளித்துவிடலாம்" என்று நினைப்பது ・வலி இருக்கிறதா? அதைக் கவனிப்பது எரிச்சலூட்டும் விஷயமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது ・மருத்துவமனைக்குச் செல்வதையோ அல்லது பரிசோதனைகளையோ காலவரையின்றித் தள்ளிப்போடுவது 1-வது இடம்: உங்கள் சொந்த உணர்வுகளை முற்றிலுமாகப் புறக்கணித்தல் ・ஒரு 'மொஜிடோ' காபி குடிக்க ஆசைப்பட்டாலும், "இது ஆடம்பரமான செலவோ?" என்று நினைத்துத் தவிர்ப்பது ・தனக்காகச் செலவிடும் சில செலவை கூட "வீண் செலவு" என்று நினைப்பது. ・"இது எனக்கு மிகவும் பிடித்தது" என்ற எண்ணம் மாறி, "இது தேவையில்லை," என்ற மனநிலைக்கு மாறுவது உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கிறதா? @OLBNNews
Открыть в Telegramஇந்திய மொழிகள் அனைத்தையும் ஒரு சவாலுக்கு அழைக்கிறேன்! கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலை, இதே போன்று உங்கள் மொழியில் உருவாக்கி வெளியிட முடியுமா? துணிந்து முயற்சிக்கும் மொழிகளுக்கு — வெற்றி பெறாவிட்டாலும் — ஆறுதல் பரிசு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்! 😄 சமஸ்கிருதத்திற்கும் தைரியம் இருந்தால் இந்த CHALLENGE-ல் கலந்துகொள்ளலாம்! 😉 JUST READ THE WORDS BELOW AND KNOW WHY TAMIL IS A CLASSICAL LANGUAGE. ஏன் தமிழ் ஒரு செம்மொழி? கீழே உள்ள தமிழ்ச் சொற்களை வாசித்து, அவற்றின் சொல்வளத்தையும் நுண்மையையும் ரசித்துப் பாருங்கள். தமிழ்ப் புவியியல் | Tamil Geography 🌍 River — ஆறு Delta — கழிமுகம் / வடிநிலம் Strait — நீரிணை Isthmus — நிலவிணை Archipelago — தொகுதீவு Island — தீவு Sea — கடல் Ocean — மாக்கடல் / பெருங்கடல் Beach — கடற்கரை Lagoon — காயல் Cove — சிறுகுடா Gulf — வளைகுடா Bay — விரிகுடா Peninsula — குடாநாடு / குடாநிலம் Cliff — ஓங்கல் Hill — குன்று Mountain — மலை Forest — காடு Jungle — அடவி Plateau — மேட்டுநிலம் Canyon — ஆற்றுக்குடைவு Valley — பள்ளத்தாக்கு Cave — குகை Desert — பாலை Oasis — பாலைச்சோலை Dune — மணற்குன்று Mesa — மேடு Prairie — பெருவெளி Plain — சமவெளி Lake — ஏரி Pond — பொய்கை Waterfall — அருவி Stream — ஓடை Geyser — ஊற்று Canal — கால்வாய் Swamp — சதுவல் Marsh — சதக்கல் Volcano — எரிமலை Glacier — சறுக்கு பனிக்கட்டி ஆறு Tundra — பனிவெளி Iceberg — பனிப்பாறை Cape — முனை Fjord — இடுக்கேரி Spring — ஊற்று Hot Spring — சுடுநீர் ஊற்று ஒரு மொழியின் தொன்மையும் செழுமையும் அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல; இயற்கையையும் உலகையும் நுணுக்கமாகப் பெயரிட்டு விளக்கும் அதன் சொல்வளத்திலும் வெளிப்படுகிறது. — தோழர் முத்துகிருஷ்ணன் @OLBNNews
Открыть в Telegramவங்கிகள் பெயர் மாற்றம்! இந்தியாவின் 9 தேசிய வங்கிகள் இனி பெயர் மாற்றம் செய்யப்பட்டு 3 வங்கிகளாக இணைக்கப்பட்டு செயல்படும் என மத்திய அரசு அறிவிப்பு. @OLBNNews
Открыть в Telegram🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா? October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்… “அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 ன்னு நினைக்காதீங்க. மேட்டர் அது இல்லை. முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. 👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate. அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல. சரி… என்ன மாறப்போகுது? 👨👩👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா? நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. அதுக்கெல்லாம் Charge ₹0. இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free. 🛒 Shop / Business-க்கு Payment? இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும். உதாரணமா: ₹3,000 Payment → MDR ₹12 ₹50,000 Payment → MDR ₹200 ₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300. ₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. Maximum ₹300 மட்டுமே. ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது. 🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்? இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள். அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க. அப்படி கிடையாது. 📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்? இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு: MDR = 0.02% Maximum: ₹300 per transaction. இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும். 💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்? இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது. அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது. 🚆 Insurance, Fuel போன்ற Payments? Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க. Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல. 📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா? இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது. 📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்? இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது. 🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்? நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை. Friend-க்கு Money Transfer → FREE ✅ Family-க்கு Money Transfer → FREE ✅ Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅ SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅ ₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅ முக்கியமான விஷயம்… News headline: “UPI payments above ₹2,000 will be charged.” இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம். அதுதான் இல்லை. சரியான புரிதல்: Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார். அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது… “ஐயையோ… Charge போயிடுமோ!” என்று பயப்பட வேண்டாம் மக்களே!!! 😄🙏🙏🙏 ஒகேவா 👍👍👍
Открыть в TelegramСвязи
Похожие каналы
Voice of Police@voiceofpoliceНовости и СМИ1,75 тыс.
The MPSC Update ©@thempscupdateНовости и СМИ1,98 тыс.
Maverick.feeels@maverickfeeelsНовости и СМИ2,12 тыс.
📰 SP ന്യൂസ് 📰@suprabhaathamnewsНовости и СМИ1,48 тыс.
Kashmir Conflict Stories@conflictwatchhqНовости и СМИ1,29 тыс.
Madhyamam@madhyamamНовости и СМИ2,9 тыс.
PIB India@pibindiaenglishНовости и СМИ3,99 тыс.
𝗕𝗛𝗔𝗥𝗔𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧@akhandbharat_firstНовости и СМИ4,72 тыс.